Pages

Subscribe:

Saturday, 3 December 2011

வெடிக்குமா விஜய்யின் ‘துப்பாக்கி’!


இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் படம் “துப்பாக்கி” . விஜய்க்கு ஜோடியாக காஜல்அகர்வால் நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெருகிறது. படத்தில் விஜய் ஒரு “குற்றவியல் போலீஸ் அதிகாரியாக”
நடிக்கிறார்.

விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இரண்டாவது படம் இது. மேலும் விஜய்க்கு போலீஸ் வேடம் என்பதால் அதிரடிக்கு குறைவிருக்காது. விஜய் பாணியில் சொல்லவேண்டுமானால் “சும்மாவே காட்டுவாரு, இப்ப போலீஸ்ன்னா சொல்லவே வேண்டாம் காட்டு காட்டுன்னு காட்டுவாரு” என்று தோன்றுகிறது.

சந்தோஷ் சிவன் கேமரா பொறுப்பை ஏற்க, ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைத்து, ஜெயமோகன் வசனங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். படக்குழு முதல்கட்ட படப்பிடிப்புக்காக திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி பக்கம் தலை காட்டுவார்கள் எனத் தெரிகிறது. முருகதாஸும் விஜய்யும் முதல் முறையாக இணைவதால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

இப்படம் தெலுங்கிலும் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. ஆனால் இந்த படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சில சிக்கல்கள் உள்ளன. தெலுங்கில் துப்பாக்கி என்ற டைட்டில் கிடைக்காததால், டைட்டிலை மாற்றலாம் என்ற யோசனையில் உள்ளனர்.

Disclaimer


WE USE LINKS TO SITES AND NOT DIRECT DOWNLOAD LINKS. THERE NO FILES HOSTED ON OUR SERVER,THEY ARE ONLY INDEXED MUCH LIKE GOOGLEWORKS.
The hosting server or the administrator cannot be held responsible for the contents of any linked sites or any link contained in a linked site, or changes / updates to such sites.

BY ENTERING THIS SITE YOU AGREE TO BE BOUND BY THESE CONDITIONS
If you don't like the software posted here, please don't hesitate to let us know (pnobelraj@gmail.com) and we will unpost it.